ஆளில்லா விமான தாக்குதலில் அல் ஷபாப் தீவிரவாதி பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தலைநகர் மொகாசிசுவில் வாழ்கிற அமெரிக்கர்களுக்கு எதிராக அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹசன் அலி தூரே சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை குறி வைத்து கொல்வதற்காக ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கூறுகையில், ‘‘ஆளில்லா விமான தாக்குதலில் தூரே கொல்லப்பட்டு விட்டாரா என்பது குறித்து ஆய்வு செய்வோம். அவர் அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் பாதுகாப்பு, உளவுத்துறை தலைவராக திகழ்ந்து வந்தார்.

3 அமெரிக்க குடிமக்களை கொல்வதற்கு அவர் சதித்திட்டம் தீட்டி வந்தார். 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம், மொகாதிசு விமான நிலையத்தில் நடந்த தாக்குதல்களில் ஆப்பிரிக்க யூனியன் வீரர்களும், அமெரிக்க குடிமக்களும் கொல்லப்பட்டதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த ஆண்டு மார்ச் 27–ந் தேதி மொகாதிசுவில் நடந்த ஓட்டல் தாக்குதலில் அவருக்கு நேரடி பங்கு உண்டு’’ என குறிப்பிட்டுள்ளது.

அல்ஷபாப்ஆபிரிக்காஆளில்லாதாக்குதல்தீவிரவாதிபலிவிமானம்
Comments (0)
Add Comment