ஆஸ்திரேலியாவை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேறிகளின் படகுகளை ஓட்டிச்சென்ற (இந்தோனேஷிய) படகோட்டிகளுக்கு ஆஸ்திரேலிய கடற்படை கப்பலில் இருந்தவர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுத்து, அந்த படகை திரும்பச்செல்லும்படி செய்தனர் என்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தோனேஷிய அரசின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த குடியேற்றக்காரர்களின் படகுகளை திருப்பியனுப்புவதற்கு ஆஸ்திரேலியா சார்பில் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் புகார்களை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் மறுக்கவில்லை.
மேலும் இந்தோனேஷிய படகோட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தார்களா என்றும் ஆஸ்திரிலேய பிரதமர் டோனி அப்பாட்டிடம் கேட்டபோது அவர் அதை ஆம் என்று ஆமோதிக்கவும் இல்லை. அப்படி நடக்கவில்லை என்று தெளிவாக மறுக்கவும் இல்லை. மாறாக, ஆஸ்திரேலியாவுக்குள் ஆட்கள் சட்டவிரோதமாக குடியேறி வருவதைத் தடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று மழுப்பலானதொரு பதிலை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்த பின்னணியில், ஆஸ்திரேலியா மீதான இந்தோனேஷியாவின் பகிரங்க விமர்சனம் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.