மத்திய அப்ருஸோ பிராந்தியத்திலுள்ள மலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடமொன்றில் அமைந்துள்ள சான் பியட்ரோ டெல்லா லென்கா தேவாலயத்திலேயே மேற்படி திருட்டு இடம்பெற்றுள்ளது.
அந்த தேவாலயத்தில் மறைந்த பாப்பரசரின் விசேட அடையாள சின்னங்கள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் மேற்படி தேவாலயத்தின் பாதுகாப்பு இரும்புக் கம்பிகளை உடைத்து உள்ளே பிரவேசித் திருடர்கள், அங்கிருந்த மறைந்த பாப்பரசரின் குருதியால் ஒருதடவை நனைக்கப்பட்ட மென்மையான துணியைக் கொண்ட விலைமதிப்பற்ற சின்னத்தையும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுக் கிறிஸ்துவின் உருவச்வசிலையொன்றையும் களவாடிச் சென்றுள்ளனர்.