ரோம் நகரத்தில் சுமார் 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதை உணர முடிந்துள்ளது. முதலில் நில நடுக்கம் 6.4 ரிக்டர் அளவுக்கு கடுமையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இது 6.2 என்ற அளவுக்கு இருந்ததாக அமெரிக்க ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குட்டிநகரமான அமாட்ரைசில், பாதி ஊர் தரைமட்டமாகிவிட்டதாக அந்நகர மேயர் கூறியுள்ளதில் இருந்து பாதிப்பின் தீவிரத்தை உணர முடியும்.
இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 368 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சேதம் அதிகம் என்பதால், உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை அடையாளம் காணுவதற்காக மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டு இதே அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியதில், இத்தாலியில் சுமார் 300 பேர் உயிரிழந்தது நினைவு கூறத்தக்கது.