இந்தியாவின் 9 முக்கிய தூண்களை வலுப்படுத்துவதே அரசின் நோக்கம்: அருண் ஜேட்லி

பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது அவர்  இந்தியாவின் பெருமைக்குரிய தூண்கள் என்று 9 துறைகளை குறிப்பிட்டு பேசினார்.

இதை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசின் நோக்கமானது, இந்தியாவின் பெருமைக்குரிய 9 தூண்களான  விவசாயம், ஊரக வளர்ச்சி, சமூக வளர்ச்சி, கல்வி -வேலைவாய்ப்பு, அடிப்படைக் கட்டமைப்பு முதலீடுகள், நிதித்துறை சீரமைப்பு, நிர்வாகம் – வர்த்தகம், நிதி ஒழுங்கு, வரி சீரமைப்பு  ஆகியவற்றை வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதே என்று கூறினார். மேலும் அந்த 9 தூண்கள். விவசாயத்துறையில் நாங்கள் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளோம் என்று கூறினார். பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

-2016-17ல் பொருளாதார ரீதியாக கடும் சவால்கள் உள்ளன. கிராமப்புறம், சமூக நலத் திட்டங்களுக்கு கூடுதல் செலவிட முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. 3-ல் 1 பங்கு மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ காப்பீடு அறிமுகம் செய்யப்படும்.

-நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து குறை வருகிறது -வருவாயில் கணிசமான அளவு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது -அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்துக்கு சர்வேத அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக உள்ளது. என தெரிவித்தார்.

  • ஊடக மேம்பாட்டுக்கு ரூ87,000 கோடி நிதிஒதுக்கீடு,
  • 100 நாள் வேலைவாய்பு திட்டத்துக்கு ரூ38,500 கோடி நிதி ஒதுக்கீடு
  • -2018 மே 1-ந் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100% மின்வசதி செய்து தரப்படும்- ஜேட்லி.
  • சபாநாயகர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அருண் ஜேட்லி உட்கார்ந்து பட்ஜெட்டை வாசிக்கிறார்
  • சிறுகடைகள் விருப்ப அடிப்படையில் வாரம் முழுவதும் செயல்பட அனுமதி, உயர் கல்விக்கு நிதி வழங்க ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
  • எஸ்.சி.எஸ்.டி பிரிவினர்களுக்கு தொழில் தொடங்க புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் சிறுநீரக பிரச்சனைக்கான மையங்கள் அமைக்கப்படும்
  • சிறுதொழில்முனைவோர் துறைக்கு ரூ5,000 கோடி ஒதுக்கீடு
  • 2016-17-ல் ரூ9 லட்சம் கோடி விவசாய கடன் தர இலக்கு நிர்ணயம்
  •  விவசாயிகள் நலன், கிராம வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, நிதி – வரி சீரமைப்புக்கு முக்கியத்துவம்
  • நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.4 சதமாக உள்ளது.
  • அந்நிய செலவாணி கையிருப்பு 350 பில்லியன் டாலராக உள்ளது.
  • ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
  • 89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும்
  • பங்கு விலக்கல் துறையின் பெயர் முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாக துறையாக மாற்றப்படும்
  • நாளொன்றுக்கு 100கி.மீ. சாலைகள் அமைப்பதுதான் இலக்கு -2.23 லட்சம் கி.மீ. முக்கிய சாலைகள் இணைக்கப்படும்
  • மாநில அரசுகளுடன் இணைந்து 160 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
  • டயாலிஸிஸ் கருவிகள் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு -அணுமின் திட்டங்களுக்கு ரூ3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கடலுக்கு அடியில் “எரிவாயு” உற்பத்திக்கு மானியம் வழங்குவதற்கு ஆலோசனை வழங்கப்படும்.
  • முதியோருக்கு ரூ1 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம்,
  • 62 புதிய நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் கிராமப்புறங்களில் கணிணிவழி கல்வி அறிமுகம்.
  • சிறுதொழில்முனைவோர் துறைக்கு ரூ5,000 கோடி ஒதுக்கீடு –
  • எழுந்திடு இந்தியா திட்டத்துக்கு ரூ500 கோடி நிதி ஒதுக்கீடு
  • வாடகை வருமானம் பெறாதா சொந்த வீட்டுக்காரகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படும்.
  • ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை
  • இந்த வருமான வரி சலுகையால் ரூ5 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் 1 கோடி பேர் பயனடைவர்
  • வணிக நிறுவனங்களுக்கான வரி 29% ஆக குறைக்கப்படும்.
அரசின் நோக்கம்அருண் ஜேட்லிஇந்தியாதூண்கள்
Comments (0)
Add Comment