டெல்லியில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கடுமையாக எதிர்க்க வேண்டும் என கூறினார்.
மேலும் ஒரு புறம் தம்மை சிறந்த ஆட்சியாளராக காட்டி கொள்ளும் மோடி மற்றொரு புறம் தனது கட்சியினரை மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேச அனுமதித்து இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவு ஆட்சியும் அதிகாரமும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் சோனியா குறை கூறியுள்ளார்.