இந்தியாவில் 54 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் கைது: மத்திய அரசு

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 54 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் இது பற்றி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில காவல்துறைகளும் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர புலனாய்வின் அடிப்படையில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பே, 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாஐஎஸ்ஐஎஸ் அமைப்புகைதுமத்திய அரசுமாநிலங்களவை
Comments (0)
Add Comment