இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச விவகாரங்களில் கூட்டாக செயல்பட முடிவு

இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு உறவு என்பதைத் தாண்டி, சர்வதேச விவகாரங்களில் கூட்டாக செயல்பட இரு நாடுகளும் முடிவெடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்முறையாக இரு நாடுகளுக்கு இடையே, ராஜதந்திர மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது குறித்து மிகுந்த ஆவலுடன் உள்ளதாக கூறியுள்ளார்.

நாளை மறுநாள் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்படவுள்ள நிலையில், அப்போது கையெழுத்தாக உள்ள ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான இக்கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம், வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்காஇந்தியாஇருதரப்பு உறவுஒப்பந்தங்கள்சர்வதேச விவகாரங்கள்நிஷா பிஸ்வால்
Comments (0)
Add Comment