இந்தியா: மும்பை நகரம் கன மழையால் முடங்கியது – ரயில் மற்றும் விமான சேவையும் பாதிப்பு

இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை பருவமழை வெள்ளப்பெருக்கால் ஸ்தம்பித்து போயுள்ளது. ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் தாமதாகவும், சில விமானங்கள் அகமதாபாத்திற்கும் திருப்பிவிடப்பட்டன.

மேலும் மும்பை மாநகராட்சி அலுவலகம் சென்ற மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ் , நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், குழாய்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மழை காரணமாக மும்பை உயர்நீதிமன்றம் இன்று செயல்படவில்லை. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மும்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பருவ மழை நீடிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாஎச்சரிக்கைகன மழைபருவ மழைபாதிப்பு.போக்குவரத்துமும்பைரயில் சேவைவிமான சேவைவெள்ளப்பெருக்கு
Comments (0)
Add Comment