இந்திய கணனி நிறுவனம் ஒன்று கானா மாணவர்களிற்கு இலவசமாக கம்பியூட்டர்களை வழங்கியுள்ளது

ஆப்பிரிக்க நாடான கானாவில் ஆசிரியர் ஒருவர் கணினி குறித்து மாணவர்களுக்கு கணினி இல்லாமல் வகுப்பு எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப்  பரவி இருந்தது.

இதையடுத்து குறித்த பாடசாலைக்கு , இந்தியாவைச் சேர்ந்த கனிணி நிறுவனம்   கம்ப்யூட்டர்களை இலவசமாக அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கானா நாட்டில் செக்யிடோமேஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் அப்பையா அகோடோ  என்பவர் அங்குள்ள பெட்டாநேஸ் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பள்ளியில் கம்யூட்டர் வாங்கும் அளவுக்கு வசதி இல்லாத காரணத்தால், கரும்பலகையில், ‘விண்டோஸ் வேர்ட்’ குறித்த படத்தை வரைந்து அதன் மூலம் பாடம் நடத்தி வந்தார்.

ஏறக்குறைய 2011ம் ஆண்டில்இருந்து இதே முறையை  அந்த ஆசிரியர்  பின்பற்றி வந்துள்ளார்.

 

இந்நிலையில், மாணவர்களுக்கு ‘விண்டோஸ் வேர்ட்’ குறித்து கரும்பலகையில் வரைந்து பாடம் எடுக்கும் காட்சியை வீடியோவா எடுத்து சமூக வலைதளத்தில் அப்பையை பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

குறித்த  காட்சியை   இந்தியாவின் ‘என்ஐஐடி’ கம்யூட்டர் கல்வி நிறுவனம் கவனித்துள்ளது.

கானாவில் என்ஐஐடி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்த பள்ளிக்குச் சென்று ஆசிரியர் அப்பையாவை பாராட்டிய  என்ஐஐடி நிறுவனம், மாணவர்களுக்கு  5 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்டாப், மற்றும்  கணினி பாடப்புத்தகங்களை இலசமாக அளித்துள்ளது

இது குறித்து அக்ரா நகரில் உள்ள என்ஐஐடி மையத்தின் மேலாளர் ஆஷிஸ் குமார் கூறுகையில்,’ ஆசிரியர்  அப்பையா ஈடுபாட்டுடன் கல்வி கற்பித்து கொடுக்கும் முறையை பார்த்து வியப்படைந்ததாக கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே  அந்த பள்ளிக்கு உதவும் வகையில், கம்ப்யூட்டர்களை இலசமாக அளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்இந்தியாகலிவிகானா
Comments (0)
Add Comment