இந்திய பங்குச் சந்தைகள், ரூபாய் மதிப்பு சரிவு : பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று ஏற்பட்ட பெரும் சரிவு மற்றும் கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு சந்தித்து வரும் வீழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சந்திப்பில்  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் உயரதிகாரிகள் சிலர் பங்கேற்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை மத்திய அரசும் ரிசர்வ் வங்கி மற்றும் செபியும் உன்னிப்பாக கவனித்து வருதாகக் கூறினார்.

தற்போதைய சூழலில் மீட்புக்கான நடவடிக்கை ஏதுமில்லை என்ற அவர், நமது பொருளாதார நிலை உறுதியாக இருப்பதாக பிரதமர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். எனினும், வெளிநாட்டு காரணிகளின் பாதிப்பிலிருந்து சமாளிக்கத் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் தேவை என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக ஜெட்லி தெரிவித்தார்.

மேலும் சந்தைகளின் போக்கு மற்றும் ரூபாய் மதிப்பு விஷயத்தில் தேவைப்பட்டால் அரசும் கண்காணிப்பு அமைப்புகளும் தலையிடும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லிஆலோசனைஇந்தியாசரிவுசெபிநடவடிக்கைபங்குச் சந்தைகள்பிரதமர் மோடிமத்திய அரசுரிசர்வ் வங்கிரூபாய் மதிப்பு
Comments (0)
Add Comment