அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மானவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் இந்திய மாணவரின் கண்டுபிடிப்பை ஒபாமா பாராட்டினார்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இளம் விஞ்ஞானிகளையும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் கண்டுபிடிப்புகளை கண்காட்சியாக வெள்ளை மாளிகையில் நடத்தி வருகிறார் ஒபாமா. இதில் இந்த ஆண்டு கலந்து கொண்டு தனது தயாரிப்பை அறிமுகம் செய்த இந்திய மாணவர் அனிருத் கணேசனை ஒபாமா மிகவும் பாராட்டினார். அனிருத் கணேசன் இந்தியாவில் உள்ள கிராமப்புற நோயாளிகளுக்காக மருந்துகளை, ஐஸ் கட்டி மற்றும் மின்சாரத்தின் உதவி இல்லாமல் நீண்ட நேரம் பதப்படுத்தி வைக்கும் குளிர்பதனப் பெட்டியை (Refridgerator) தயாரித்துள்ளார்.
நிகழ்ச்சியில் ஒபாமா பேசும்போது, அனிருத் கணேசன் தனது சிறு வயதில் இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நோயினால் அவதிப்படும்போது சிகிச்சைக்காக அவனுடைய தாத்தாவும் பாட்டியும் அவரை 10 மைல்களுக்கும் தொலைவில் உள்ள ஒரு நகரத்திற்கு அழைத்துச்சென்று மீண்டும் திரும்பி வந்ததாகவும் அதனால் அவர் மிகவும் கஷ்டபட்டதாகவும் ஒபாமா கூறினார். கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்லும் போது மருந்துகளை நீண்ட நேரம் பதப்படுத்தி வைக்க முடியாததே இதற்கு காரணமாக அனிருத் கூறினார். அதனாலயே அவர் இந்த சிறிய அளவிலான குளிர்சாதன பெட்டியை தயாரித்ததாகவும் கூறினார்.
இந்த குளிர் சாதன பெட்டியை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். மேலும் இதில் ஐஸ் கட்டி மற்றும் மின்சாரத்தின் உதவி இல்லாமலே நீண்ட நேரத்திற்கு மருந்துகளை பாதுகாப்பாக வைக்க முடியும் என்றும் அனிருத் கணேசன் கூறினார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=rSrYsU-SmDM” width=”560″ height=”315″]