அப்போது அவர் பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து கோமா நிலையில் பாகிஸ்தான் உள்ளது. சிகிச்சைக்குப்பின் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளி போல கிடக்கிறது.
தாக்குதல் நடந்து 2 நாட்கள் கடந்த பின்பும் என்ன நடந்தது என்று கூட தெரியாமல் எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருக்கிறது. இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. ஏனெனில் இந்தியாவால் எப்படி தாக்குதல் நடத்த முடிந்தது என்பதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் நமது வீரர்கள் தாக்குதலை வெற்றிகரமாக எளிதில் முடித்து விட்டார்கள். பகவான் அனுமனுக்கு இலங்கைக்கு சென்றபோது தனது பலம் என்ன என்பது அனுமனுக்கே தெரியாது. அதுபோல்தான் நமது வீரர்களும் பலத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் உத்தரவை நமது படை வீரர்கள் வெற்றிகரமாக முடித்து இருக்கிறார்கள்.
எந்த நாட்டையும் கைப்பற்றும் எண்ணமோ, ஆக்கிரமிக்கும் எண்ணமோ இந்தியாவுக்கு ஒருபோதும் கிடையாது. பகவான் ராமர் இலங்கை மீது போர் தொடுத்து வென்று அதை விபீஷணுனுக்கு வழங்கினார். அதுபோல் நாம் வங்காளதேசம் போரில் நடந்து கொண்டோம்.
நாம் யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. ஆனால் சிலர் நமக்கு தீங்கு விளைவிக்க நினைக்கிறார்கள். அதுபோல் நடந்து கொண்டால் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.