புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று எர்த் ஹவர் எனப்படும் புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லா நாடுகளிலும் தங்கள் உள்ளூர் நேரத்தின்படி, இரவு 8.30 முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சார பயன்பாட்டை நிறுத்தி வைத்து, புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதன்முதலாக ஆஸ்திரேயாவின் சிட்னி நகரில் புவி நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டே உலகம் முழுவதும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர். ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று உலக வன நிதியம் அமைப்பு, ஐநா மன்றம் ஆகியவை இந்த புவி நேரத்தை, முன்னெடுத்து செல்கின்றன. இதன் மூலம், ஆற்றல் சேமிப்பு குறித்தும், பருவ நிலை மாற்றம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இனி என்ன செய்ய வேண்டும்?
1.பொது இடங்களில் மரக்கன்று நடலாம்
2.சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தலாம்.
3.செல்பேசியை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு விநாடியும், கரிம வாயு வெளியேற்றப்படுகிறது. எனவே, அதனை பயன்படுத்தும் அளவை குறைக்கலாம்
இன்று என்ன செய்யவேண்டும் ?
1. இரவு 8.30 முதல் 9.30 மணி வரை செல்பேசி உட்பட மின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும்
2. இன்று இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இருப்பதால் எப்படி தொலைக்காட்சி, செல்பேசி பார்க்காமல் இருப்பது என்பவர்களுக்கு, வெப்பமயமாதலை தடுப்பது முக்கியமா ? அல்லது கிரிக்கெட் முக்கியமா ? என்பதை முடிவு செய்து அதன் படி செயல்படவும்
3. பார்த்து தான் ஆக வேண்டும் என்பவர்கள், குழுவாக இணைந்து ஓர் இடத்தில் தொலைக்காட்சியை காணலாம். 4. சில திரை நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் புவிநேரத்தை கடைபிடிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.