சிறிலங்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அத்துடன் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாகம் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள, மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவவில் இருந்து கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளார்.
ஏற்கனவே அவருடன் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறியதுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும் பேசியுள்ளார்.
இதற்கிடையே, இன்று மாலை புதிய அதிபர் மற்றும், பிரதமர் பொறுப்பேற்கும் போது, பதிய பாதுகாப்புச் செயலரும் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழக்கிறது.
இந்நிலையிலேயே, புதிய பாதுகாப்பு செயலாளராக சிறீலங்காவின் முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலையே பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.