இம்ரான் கான், காத்ரி ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு

பாகிஸ்தானில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இம்ரான் கான் மற்றும் மதகுரு காத்ரி ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் முற்றுகையிட்டுள்ள இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆதரவாளர்கள், சனிக்கிழமை இரவு பிரதமர் நவாஸ் ஷெரீபின் வீட்டின் முன்பு காவல்துறையினரால் வைக்கப்பட்டிருந்த பேரிடுகார்டுகளை அகற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைய முயன்றனர். பிரதமருக்கு எதிராக கோஷமிட்டபடி நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்லவும் முயன்றனர். ஆனால் அவர்களை பிரதான வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை தாக்க முயன்றதாக கூறி இம்ரான் கான், காத்ரி ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் மற்றும் இம்ரான்கான், காத்ரி கட்சிகளின் மூத்த தலைவர்கள மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை, கொலை செய்யும் எண்ணம், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் 7 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இம்ரான் கான், காத்ரி ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

ஆகியோர்இம்ரான் கான்காத்ரிசட்டத்தின்கீழ்செய்யப்பட்டுள்ளதுதடுப்புதீவிரவாதநடத்திபதவிபதிவுபாகிஸ்தானில்பிரதமர்போராட்டம்மதகுருமற்றும்மீதுவரும்வலியுறுத்திவழக்குவிலக
Comments (0)
Add Comment