இராக் தலைநகர் பாக்தாத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்வு

இராக் தலைநகர் பாக்தாத்தில் பல ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த ஊரடங்கு உத்தரவு இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

சனிக்கிழமை முதல் இந்த ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு பிரதமர் ஹைதர் அல்-அபாதி உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இராக் தலைநகரில் சகஜநிலையை திரும்பச்செய்வதே இதன் நோக்கம் என்று கருதப்படுகின்றது. ஊரடங்கு உத்தரவு நேரம் அவ்வப்போது மாறிவந்துள்ளது.

இப்போது, நள்ளிரவு முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. பாக்தாத்தில் இன்னும் கார்க்குண்டுத் தாக்குதல்களும் ஏனைய ஆயுததாரிகளின் தாக்குதல்களும் நடந்துவருகின்றன.

எனினும், இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் தலைநகரில் குறைந்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

அமல்இராக்உத்தரவுஊரடங்குதலைநகர்தளர்வுநீக்கம்பாக்தாத்பிரதமர்ஹைதர் அல்-அபாதி
Comments (0)
Add Comment