இந்த சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இறுதிக்கட்ட யுத்தத்தை முழுமூச்சாக முன்னெடுத்த இராணுவப் பிரதானிகள் 9 பேர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவப் பிரதானிகளிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்புக்கு முரணாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.