இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் இவ்வாறு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
1987ம் ஆண்டு 45ம் இலக்க சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது பின்னர், 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.