இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையுன் விரிவான பாதுகாப்பு உறவுகளைப் பேண விரும்புவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகே ஸ்வாயார் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், முழு அளவிலான பாதுகாப்பு உறவுசார் ஒப்பந்தம் கைச்சாத்திடுவது போன்ற விடயங்கள் குறித்து தற்போதைக்கு கவனம் செலுத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து படைத்தரப்பிற்கு கற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.