இலங்கை போர்க்குற்றம் குறித்த அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக ஏற்பு

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இன்று முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது உறுப்பு நாடுகள் கருத்துகளை தெரிவித்தன. இதன் பின்ன வாக்கெடுப்பு இன்றி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 அமெரிக்காவின் இந்த தீர்மானம் முற்றிலும் இலங்கைக்கு ஆதரவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இலங்கை போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், உள்நாட்டு விசாரணை போதுமானது என்பதை வலியுறுத்தும் வரிகள் அமெரிக்க தீர்மானத்தில் உள்ளது.

 அதன்படி இலங்கை போர்க்குற்றம் குறித்து காமென்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய கலப்பு விசாரணை நடைபெறும். முன்னதாக இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஐநா மனித உரிமைகள் ஆணையம் முன்பாக உலகத் தமிழகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க தீர்மானம்இலங்கைஐ.நா மனித உரிமை ஆணையம்சர்வதேச விசாரணைதமிழர்கள்போர்க்குற்றம்
Comments (0)
Add Comment