இலங்கை ராணுவத்துடன் இந்தியப் படைகள் கூட்டுப்பயிற்சி

தமிழக அரசு மற்றும் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவத்துடன் இந்தியப் படைகள் இன்று கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன.

மித்ரா சக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான போர் பயிற்சி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள உவா-குடோயா கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் இன்றிலிருந்து வரும் 23-ம் தேதிவரை நடைபெறும் என்றும் இதில் இந்திய சிறப்புப் படையை சேர்ந்த சுமார் 40 வீரர்களும், இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 வீரர்களும் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, இந்தியா-இலங்கை வீரர்களுக்கிடையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் வாடிக்கையான போர்ப் பயிற்சிதான் என இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

எனினும், கடந்த 2012-க்குப் பிறகு இதைப் போன்ற கூட்டுப் போர் பயிற்சிகளில் இந்தியாவும், இலங்கையும் ஈடுபட்டதில்லை எனவும், கடந்த மாதம் கொழும்புவில் அந்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர் இடையிலான இருநாட்டு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையின்போதுதான் இந்த புதிய போர் பயிற்சிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இராணுவம்தடுப்புதமிழக அரசுதமிழர்கள்தீவிரவாம்பயிற்சிமித்ரா சக்தி
Comments (0)
Add Comment