இந்த பூமியதிர்ச்சியில் சிக்கி 654 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
டேகோ என்ற மேற்படி 4 வயது நாய் வட மேற்கு மாகாணமான மனாபியில் பெடெர்னாலெஸ் எனும் இடத்தில் பூமியதிர்ச்சி இடிபாடுகளின் கீழ் புதையுண்டிருந்தவர்களை மீட்கும் மீட்புப் பணியாளர்களின் பணிக்கு உதவி வந்துள்ளது.
அந்த நாய் இடிபாடுகளின் சிக்கியிருந்த 7 பேரை தனது மோப்ப சக்தியின் மூலம் கண்டறிந்து அவர்களை காப்பாற்ற உதவியுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது வெப்பம் மற்றும் வரட்சி காரணமாக அந்த நாய் உயிரிழந்துள்ளது.