ஈராக்கில் ஐ எஸ் தற்கொலை தாக்குதல்! 12 பேர் பலி

ஈராக்­கிய தலை­நகர் பக்­தாத்­திற்கு அருகில் அந்­நாட்டு எரி­வாயு தொழிற்­சா­லை­யொன்றில் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யொ­ருவர் ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 12 பேர் பலி­யா­ன­துடன் 25 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
இந்தத் தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர்.
வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட கார் ஒன்றை செலுத்தி வந்த தற்­கொலைக் குண்­டு­தாரி தலை­ந­கரின் வடக்கே தாஜி நக­ரி­லுள்ள மேற்­படி தொழிற்­சா­லையின் நுழை­வா­யிலில் வெடிக்க வைத்து இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யுள்ளார்.
இத­னை­ய­டுத்து குண்­டுகள் பொருத்­தப்­பட்ட மேலங்­கி­களை அணிந்­தி­ருந்த சுமார் 6 தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் தொழிற்­சா­லைக்குள் பிர­வே­சித்து பொலி­ஸா­ருடன் மோதலில் ஈடு­பட்­டுள்­ளனர்.
இந்த மோதலில் பொலிஸார் தரப்பில் 15 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
உயி­ரி­ழந்­த­வர்­களில் எத்தனை பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஈராக்ஐ.எஸ். தீவிரவாதிகள்தற்கொலைதலைநகர்தாக்குதல்பக்தாத்
Comments (0)
Add Comment