ஈராக்கில் பாராளுமன்றினை ஆக்கிரமித்து பாரிய போராட்டம்!

ஈராக்­கிய தலை­நகர் பாக்­தாத்­தி­லுள்ள அதி பாது­காப்பு வல­யத்­துக்குள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் ஊடு­ருவி அந்­நாட்டு பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்தை ஆக்­கி­ர­மித்­த­தை­ய­டுத்து அங்கு பெரும் பதற்­ற­நிலை நில­வு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
இந்­நி­லையில் அந்­நாட்டுப் பிர­தமர் ஹைதர் அல் – அபடி, மேற்­படி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்து அவர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்க ஞாயிற்­றுக்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார்.
புதிய அமைச்­ச­ர­வை­யொன்றை அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான காலக்­கெ­டு­விற்கு எதிர்ப்புத் தெரி­வித்து மத­குரு­வான மொக்­தடா சாட்ரின் ஆத ­ர­வா­ளர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
அவர்கள் கன­மான கொங்­கிறீட் மதில் சுவர்­களில் ஏறி அதி பாது­காப்பு பிர­தே­சத்­துக்குள் பிர­வே­சித்­துள்­ளனர்.
மேற்­படி எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து பாக்­தாத்தில் அவ­ச­ர­கால நிலை­மை­யொன்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
மத்­திய பாக்­தாத்­தி­லுள்ள அந்த வல­யத்தில் ஜனா­தி­பதி மாளிகை, பிர ­தமர் அலு­வ­லகம் மற்றும் பல நாடு­களின் தூத­ர­கங்கள் என்­பன அமைந்­துள்­ளன.
இந்­நி­லையில் அங்­கி­ருந்த அமெ­ரிக்க தூத­ர­கத்­திற்கு அருகில் கூடி­ யி­ருந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் ஆர்ப்­பாட்­டக்­காரர்­களை கலைக்கும் முக­மாக கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம் செய்­துள்­ளனர்.
இதன்­போது ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் பாரா­ளு­மன்­றத்தை விட்டு வெளி­யே­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது கார்கள் மீது பொருட்­களை வீசித் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.
தொடர்ந்து சனிக்­கி­ழமை இரவு ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் பாரா ­ளு­மன்­றத்­துக்கு வெளி யில் முகா­மிட்­டி­ருந்த­ தா­கவும் மறுநாள் ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் அவர்­களில் பலர் அங்கு தொடர்ந்து தங்­கி­யுள்­ள­தா­கவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
எனினும் அந்­நாட்டு பிர­தமர் தெரி­விக்­கையில், பாக்தாத் பாது­காப்பு படை­யி­னரின் கட்­டுப்­பாட்டின் கீழ் உள்­ள­தாக வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
முதல் நாள் சனிக்­கி­ழமை பாக்­தாத்­திற்கு அண்­மையில் ஷியா யாத்­திரிகர்­களை இலக்குவைத்து நடத்­தப்­பட்ட கார் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 23 பேர் பலி­யா­ன­துடன் 38 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நஹரவன் பிராந்தியத்தில் இடம் பெற்ற இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ள னர்.
3தொன் வெடிபொருட்களை கொண்ட வாகனமொன்றைப் பயன்படுத்தி தற்கொலைக் குண்டுதாரியொருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஈராக்தற்கொலைதாக்குதல்பலிபாக்தாத்பாதுகாப்பு படைபாராளுமன்றம்பிரதமர்போராட்டம்மக்கள்
Comments (0)
Add Comment