ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று இரு இடங்களில் குண்டு வெடிப்பு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர் வன்முறை மற்றும் குண்டுவெடிப்புகளால் சிதைந்து வரும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று இரு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

பாக்தாத்தில் உள்ள அல்-ஷர்ஜி பகுதியில் உள்ள சிறிய உணவகத்திற்கு வெளியே நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். 11 பேர் காயமுற்றனர்.

நகரின் மையப் பகுதியான சிபாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த இரு தாக்குதல் சம்பவங்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இடம்ஈராக்குண்டுசக்திதலைநகர்பலிபாக்தாத்வன்முறைவெடிப்பு
Comments (0)
Add Comment