உக்ரைனில் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக விரைவில் உடன்பாடு

உக்ரைனில் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக விரைவில் உடன்பாடு ஏற்படும் என்று ரஷியா அதிபர் விளாடிமீர் புதின் நம்பிக்கை தெரிவித்தார்

உக்ரைனில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு, ரஷியா உதவி வருவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இங்கு இரு தரப்புக்கும் இடையே புதிய சண்டை நிறுத்தத்துக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பிரான்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்ட் ரஷியா சென்றுள்ளார். மாஸ்கோவில் அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், இந்த விவகாரத்துக்கு கண்டிப்பாக நாம் ஒரு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சந்திப்பு குறித்து கூறியுள்ள ஹாலண்ட், உக்ரைன் விவகாரத்தில் சிறந்த தீர்வு காண சரியான நேரம் இது. இந்த பேச்சுவார்த்தை மூலம் சிறிது பயன் ஏற்படும் என நம்புகிறேன். எங்களை பிரிக்கும் விதத்தில் எந்த சுவரும் தோன்றாமல் கவனமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

உக்ரைன் விவகாரத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு தீர்வு காண இந்த சந்திப்பு சிறந்த பங்களிப்பை ஏற்படுத்தும் என புதினும் கருத்து தெரிவித்து உள்ளார். நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் விரைவில் உடன்பாடு ஏற்படும் என்று ரஷியா அதிபர் விளாடிமீர் புதின் நம்பிக்கை தெரிவித்தார். இது மிகவும் சோகமான நிலையாகும், மக்கள் கொலை செய்யப்படுவதை நாம் பார்க்க முடியும். உக்ரைனுடன் போர்நிறுத்தம் தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன். இந்த பெரிய விவகாரம் தொடர்பாக நாங்கள் பிரான்சு அதிபருடன் ஆலோசனை நடத்தினோம். என்றார்.

அதிபர்அமெரிக்காஉக்ரைன்உடன்பாடுஐரோப்பாதீர்வுநம்பிக்கைநிரந்தரநிறுத்தம்புதின்போர்ரஷ்யா
Comments (0)
Add Comment