இரு நாடுகள் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் மோசமடைவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள புடின், ரஷ்யத் தொழில்துறைக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் , யார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்நாட்டுடனான உறவை மேம்படுத்திக்கொள்ளவே ரஷ்யா விரும்புவதாக புடின் தெரிவித்தார்.