எண்ணெய் வளம் கொண்ட தென் சீனக்கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் அங்குள்ள தீவுகளை சீனாவுடன் தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.
சீனா, அங்கு பல செயற்கை தீவுகளை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உட்டி என்ற தீவில் ஏராளமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அந்த நாடு குவித்திருப்பது செயற்கைக்கோள் படத்தின் மூலம் சமீபத்தில் அம்பலத்துக்கு வந்தது. அத்துடன் அங்குள்ள ஸ்ப்ராட்லி தீவு பகுதியில் சீனா ரேடார்களை நிறுவுவதற்கான நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அங்கு உட்டி தீவுகளுக்கு சீனா ஷென்யாங் ஜே–2, சியான் ஜேஎச்–7 ரக போர் விமானங்களை அனுப்பி உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. சீனா உட்டி தீவுகளுக்கு போர் விமானங்களை அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். இப்படி தென்சீன கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவது குறித்து ஆராய்ந்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.