இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வாராணசி, அலாகாபாத், காஸிப்பூர், பலியா உள்பட 28 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 987 கிராமங்களைச் சேர்ந்த 8.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையும் மழை பெய்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே, பிகார் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து, இதுவரை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149-ஆக உயர்ந்துள்ளது.