பூங்காவில் சைபீரியன் புலிகள் பராமரிக்கப்படும் பகுதியில் பார்வையாளர்கள் கார்கள் நிறுத்தவோ, இறங்கி நடக்கவோ அனுமதியில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் அப்படி பயணம் செய்த கார் ஒன்று அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நின்றது. கார் ஒட்டிக்கொண்டிருந்த பெண் பின் இருக்கைக்கு செல்வதற்காக இறங்கி வந்தார். அப்போது திடீரென சாலைக்கு ஓடிவந்த புலி ஒன்று அவர் மீது பாய்ந்து தரதரவென காட்டு பகுதிக்கு இழுத்து சென்றது. இந்தக் காட்சியைக் கண்டு பதறிய இளம்பெண்ணின் தாயாரும் மற்றொருவரும் அலறியடித்தபடி அப்பெண்ணை மீட்க புலியைத் துரத்திச் சென்றனர். அப்போது, மகளை மீட்க சென்ற தாயை வேறொரு புலி கடுமையாகத் தாக்கியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.