உலகின் பலமிக்க 17 நாட்டு பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆலோசனை

உள்நாட்டுப் போரால் கடந்த ஐந்தாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நேற்றுகூடி ஆலோசனை நடத்தினர்.  

சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒருவாரத்துக்குள் வெள்ளை கொடி ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு மேற்கண்ட 17 நாடுகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் வரும் 25-ம் தேதி சிரியா ஆட்சியாளரின் பிரதிநிதிகளுக்கும், போராளிக்குழுக்களுக்கும் இடையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  சிரியாவில் பிரதான போராளிக்குழுவுக்கு தலைமை தாங்கியுள்ள சலிம் அல்-முஸ்லட் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.   தற்போது முனிச் நகரில் எடுக்கப்பட்ட முடிவை அரசு தரப்பினர் எவ்வகையில் பின்பற்றுகின்றனர் என்பதை தொடர்ந்து கண்காணிப்போம்.

முதல்கட்டமான அமைதி நடவடிக்கை பலனளித்தால் மட்டுமே அடுத்தகட்டமாக அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்த முன்வருவோம்.  ஒழுங்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் முன்னேற்றம் காணப்பட்டால் விரைவில் ஜெனிவா நகரில் சந்திப்போம் என இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சலிம் அல்-முஸ்லட் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிஅரசியல்ஆலோசனைஉள்நாடுசிரியாதீர்வுபாதிப்பு.பிரதிநிதிகள்போர்
Comments (0)
Add Comment