தொடர்ந்து வரும் உள்நாட்டு மோதல்களால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப்பின் மத்தியக் கிழக்குப் பிராந்தியம் மற்றும் வடக்கு ஆப்ரிக்கா பிராந்தியத்திற்கான இயக்குநர் பீட்டர் சலமா தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வருடத்தில் மட்டும் சிரியா, லிபியா, ஈராக், பாலஸ்தீனிய பிராந்தியம், சூடான் மற்றும் ஏமனில் 200க்கும் அதிகமான முறை பள்ளிகள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாகவும், 52ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியை விட்டுச் சென்றுள்ளதாகவும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.
தொடர் தாக்குதல்களால் இந்தப் பிராந்தியத்தில் நான்கில் ஒரு பள்ளி மூடப்பட்டுள்ளதாகவும், 20 லட்சம் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளதாகவும் யுனிசெஃப் ஆய்வில் தெரிய வந்துள்ளது.