அண்மைக் காலங்களாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அகதிகளின் குடியேற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேனுவல் வால்ஸ், உள்நாட்டு யுத்தங்கள், அடக்குமுறைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல்களிலிருந்து தப்பி தஞ்சம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்களை கெளரவத்துடன் வரவேற்க பிரான்ஸ் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
“உங்கள் நாடுகளில் உள்ள பணி செய்து ஓய்ந்துள்ள நபர்கள் மற்றும் வீடுகள் இல்லாமல் அவதிப்படும் ஏழை மக்களை எங்களிடம் கொடுங்கள், அவர்களுக்கு நாங்கள் வெளிச்சம் அளிக்கிறோம்” என்ற அமெரிக்க சுதந்திர தேவி சிலையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகத்தை பிரதமர் குறிப்பிட்டு உருக்கமாக பேசியுள்ளார்.
தங்கள் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்தோடு, தகுந்த காரணங்கள் இல்லாமல் பிரான்சுக்குள் வருபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டு உயிரிழந்த சுமார் 200 புலம்பெயர்ந்தவர்களுக்காக பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.