இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, மனித உரிமை மீறல்களுக்கு உள்நாட்டு விசாரணை மூலமே தீர்வுகாணவே இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துளளார்.
ஐநா மனித உரிமை ஆணைய அறிககை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ராஜபக்ச அதிபராக இருந்திருந்தால், அறிக்கை பலமடங்கு கடினமாக இருந்திருக்கும். தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையின் கடினத்தன்மை ஆயிரம் மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. பொய் வாக்குறுதி அளித்து ராஜபக்சே அரசு சர்வதேச சமுதாயத்தை பகைத்துக்கொண்டது. ராஜபக்சே இல்லாத அரசாங்கமே நாட்டின் தற்போதைய நிலை என்றும் சிறிசேன தெரிவித்தார்.