இதற்கு நாகலாந்தை சேர்ந்த பழங்குடி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இதை எதிர்த்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆங்காங்கே வன்முறை வெடித்தது. மாநில உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தை சூறையாடினார்கள். கோகிமா நகராட்சி அலுவலகம் மற்றும் துணை கமிஷனர் அலுவலகம், போக்குவரத்து அலுவலகம், கலால்துறை ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.
இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிட்ட முதல்-மந்திரி சேலியங் மற்றும் அவரது அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பல இடங்களிலும் கலவரம் நடந்து வருகிறது.
கலவரத்தை உள்ளூர் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டுள்ளது.
திமாப்பூர் மற்றும் கோகிமா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.