எபோலா நோயை விரைவில் கட்டுப்படுத்த தவறினால் பெரும் அபாயம் ஏற்படும் – ஐநா

எபோலா நோயை  விரைவில் கட்டுப்படுத்த தவறினால் நாளடைவில் காற்றுவழியாக் பரவும் அபாயம் ஏற்படும்  என ஐநா எச்சரித்து உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான் குனியா  லிபீரியா, உள்பட 5 நாடுகளில் எபோலோ நோய் வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது.இந்த நாடுகளில் எபோலோ நோய்க்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.ஒவ்வொரு மாதமும் எபோலோ நோயின் நோய் தாக்கம் இரட்டிப்பாகி வருகிறது. மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு  மையம் இந்த நோயை கட்டுபடுத்தவில்லை என்றால் ஜனவரி மாதம் இந்த நோய் தாக்குதல் 14 லட்சத்தை  எட்டக்கூடும் என எச்சரித்து உள்ளது

ஐநா பொது செயலாளரின் சிறப்பு பிரதி நிதி  அந்தோணி பன்பேரி இது குறித்து கூறியதாவது:-

தற்போது உள்ள சூழ் நிலை கெட்ட கனவாக இருக்கலாம் . ஆனால்  அது எல்லை மீறி போய்விட வில்லை. இந்த வைரஸ் நாளடைவில் சக்தி பெற்று  காற்று வழியாக பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எபோலோ பேரழிவு வைரஸ் நோய் போல் ஒரு மோசாமானதை எப்போதும் கண்டது இல்லை.சர்வதேச சமூகம்  வைரஸ் நோய் பரவுவதை தடுப்பது தொடர்பான  நடவடிக்கையை காலதாமதாமாக எடுத்து உள்ளது. இப்போது இந்த நோயை தடுக்கும் பணி கடுமையானதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அந்தோணி பன்பேரிஅபாயம்எபோலாஐநாகுனியா லிபீரியாதாக்குதல்நோய்பாதிப்பு.மேற்கு ஆப்பிரிக்காவைரஸ்
Comments (0)
Add Comment