ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதிதிரட்டியவர்கள் அவு. கைது

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு உலகின் பல நாடுகளில் சட்டவிரோதமாக நிதி திரட்டப்படுகிறது.  

இந்த நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி புறநகரில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்ட முயன்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பள்ளி மாணவி. மற்றொருவர் 20 வயது வாலிபர் ஆவார்.  இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் துணை கமிஷனர் கேதரின் பர்ன் நிருபர்களிடம் பேசுகையில், “ ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு சட்ட விரோதமாக நிதி திரட்டி, அதை அனுப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்” என கூறினார்.

அவுஸ்ரேலியாஆதிகம்இயக்கம்ஈராக்ஐஎஸ்ஐஎஸ்கைதுசிரியாதிரட்டல்நிதி
Comments (0)
Add Comment