மேலும் பிரிட்டனின் பிரபுக்கள் அவையில் நடைபெற்ற விழாவில் பேசிய ராணி, அனைத்து மக்களின் நலனும் பேணப்படுவதுடன், உழைக்கும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கும் வகையில் தனது அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராணி எலிசபெத் தனது உரையில், சட்டவிரோதக் குடியேற்றம், ஸ்காட்லாந்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது மற்றும் வரி உயர்வைத் தடுக்கும் மசோதா உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக அறிமுக உரை நிகழ்த்திய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன், தாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றும், அதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.