இதில் நிதி திரட்டிய கும்பலின் தலைவனான ரகுமான் மிசானுருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கூட்டாளிகளில் சொஹேல் ஹாவ்லதருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, மியா ரூபேலுக்கும், முகமது ஜப்பாத் கைசாருக்கும் தலா 2½ ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜமான் தவுலத், மாமுன் லியாகத் அலி என்னும் 2 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்கிறது.
வங்காளதேசத்தில் உள்ள அரசை கவிழ்த்து விட்டு, ஐ.எஸ். இயக்கத்தின் அரசை நிறுவுவதுதான் 6 பேரின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளதாக வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.