கடந்த வாரம் வியாழக்கிழமை சிரிய ரக்கா நகரில் இடம்பெற்ற இந்த மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
முயாஸ் கஸன் என்ற மேற்படி சிறுவன், தனது நண்பர்களுடன் இணைந்து உதைபந்தாட்ட விளையாட்டை விளையாடிய பின்னர் தகாத சொற் பிரயோகத்தை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மேற்படி சொற் பிரயோகம் மூலம் குறிப்பிட்ட சிறுவன் இறை நிந்தனைக்குரிய பாவ காரியமொன்றைச் செய்துள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவிக்கின்றனர்.