ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: அமெரிக்காவிடம் ராணுவ உதவி கேட்ட ஈராக்

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் ஈராக் ராணுவத்திற்கு போதிய பயிற்சி மற்றும் உதவிகள் செய்வதற்கு 3,100 அமெரிக்க வீரர்கள் மட்டுமே ஈராக்கில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்கா தீவிரமாக தாக்குதல் நடத்தியும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. எனவே, ஈராக் தலைநகரம் பாக்தாத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். எனவே பாக்தாத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் கூடுதல் உதவி செய்யும்படி ஈராக் அமெரிக்காவை கேட்டுக்கொண்டது.

மேலும் ஜெர்மனில் நடந்த பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஈராக் பிரதமர் ஹைதர்அலி அபாதியும் கலந்து கொண்டனர். இருவரும் சந்தித்து பேசுகையில், ஈராக் நாட்டின் பிரதமர், ஒபாமாவிடம் மேலும் தேவையான ராணுவ உதவிகளை செய்யும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து மேலும் 400 வீரர்களை அனுப்புவதற்கு ஒபாமா சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அமெரிக்க அரசு அறிவிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

அச்சுறுத்தல்அதிபர் ஒபாமாஅமெரிக்காஈராக்ஐ.எஸ். தீவிரவாதிகள்தாக்குதல்பிரதமர் ஹைதர்அலிராணுவம்
Comments (0)
Add Comment