ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஊடுருவலை தீவிரமாகக் கண்காணிக்கின்றது மலேசியா

இராணுவப் படைகளுக்கிடையே ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஊடுருவலை அதன் சக அதிகாரிகளை வைத்தே கண்காணிக்கப்படும் என  அரச மலேசிய காவல்படைத் தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார்  தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரண்டு இராணுவ வீரர்களுடன் 15 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் பேசிய  டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார்,  சிரியாவிலிருந்து நாடு திரும்பியவர்களையும், அந்நாட்டில் இன்னமும் தங்கியிருப்பவர்களும் கண்காணிக்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.

“அரசாங்க இலாகாக்கள், மற்றும் பொதுச் சேவை ஊழியர்கள் பணியாற்றும் துறைகளில் யாராவது தீவிரவாத நடவடிக்கைகளில்  ஈடுபடுகிறார்களா என்பது குறித்து  தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.

“இதுவரையில், பொதுமக்களிடமிருந்து நமக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. பலர் தங்கள் மத்தியில் நிகழும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தயக்கமின்றி புகார் தெரிவிக்கின்றனர். இந்த விவேகமான நடவடிக்கைகள் தொடரவேண்டும்” என டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகாரிகள்இயக்கம்இராணுவம்ஊடுருவல்ஐஎஸ் ஐஎஸ்கண்காணிப்புகாவல்படைடான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார்தலைவர்தீவிரவாதம்படைமலேசியா
Comments (0)
Add Comment