ஒபாமா தனது வருவாயில் 18.7 % வரிக்கும், 14.7 % நன்கொடைக்கும் செலவிட்டுள்ளார்

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் கடந்த ஆண்டு தங்களது மொத்த வருவாய் 4,36,065 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.9 கோடி) ஈட்டியதாக தங்களது வருமான வரிக் கணக்கில் தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது: அதிபரும், அவரது மனைவியும் கூட்டாகத் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு ரூ.4,36,065 டாலரை மொத்த வருவாயாக ஈட்டியதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது வருவாயில் 81,472 டாலரை (சுமார் ரூ.54 லட்சம்) அவர்கள் வரியாக செலுத்தியுள்ளனர்.  64,066 டாலரை (சுமார் ரூ.43 லட்சம்) 34 அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்தனர். இந்த வகையில், ஒபாமா குடும்பத்தினரின் வருவாயில் 18.7 சதவீதம் வரிக்காகவும், 14.7 சதவீதம் நன்கொடைக்காகவும் செலவிடப்பட்டது.

நாட்டின் வரி வருவாயில் பெரும் பணக்காரர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சலுகைகளை அளிக்கவும் வகை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தவர் அதிபர் ஒபாமா. அதன் அடிப்படையில், அதிபர் ஒபாமா தனது வருவாயில் கணிசமான பகுதியை வரியாகச் செலுத்தியுள்ளார் என்றார் ஜோஷ் எர்னஸ்ட்.

அதிபர்அமெரிக்காஇந்தியாஒபாமாகணக்குமதிப்புமனைவிமாளிகைமிஷெல்வரி
Comments (0)
Add Comment