ஒலிம்பிக் போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து பலர் பலி!

பிரே­சிலின் ரியோ டி ஜெனி­ரோவில் கடற்­க­ரை­யோரம் கட்­டப்­பட்ட மிதி­வண்டி பாலம் இடிந்து விழுந்­ததில் 2 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. 2016ஆம் ஆண்­டுக்­கான ஒலிம்பிக் போட்­டிகள் பிரேசிலில் எதிர்­வரும் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்­க­வுள்­ளன. இதற்­கான ஏற்­பா­டுகள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.
இந்­நி­லையில் ஒலிம்பிக்போட்­டி­களை முன்­னிட்டு ரியோ டி ஜெனி­ரோவில் கடற்க­ரையை ஒட்டி மிதி வண்டிபாலம் கட்­டப்­பட்­டது. கடந்த ஜன­வரி மாதம் திறந்­து­வைக்­கப்­பட்ட இந்த பாலம் கடல் மட்­டத்தில் இருந்து சுமார் 150 அடி உய­ர
த்தில் கட்­டப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தற்­போது இந்த பாலம் இடிந்து விழுந்­துள்­ளது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இந்த சம்­பவம் கார­ண­மாக பாலத்தில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். 3 பேரை காண­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.
பெரிய அலைகள் வந்து மோதி­யதால் பாலம் இடிந்து விழுந்­தி­ருக்­கலாம் என்று சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ஒலிம்பிக்கடற்கரைஜெனிரோபலிபாலம்பிரேசில்போட்டிரியோ
Comments (0)
Add Comment