மேலும் இந்த நிதி உள்ளூராட்சி சபைகள் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியிலிருந்து வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே உள்ளூராட்சி சபைகளின் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.
இந்நிலையில், கடன் தவணைப் பணம் செலுத்தத் தவறியமைக்கான விளக்கத்தைக் கேட்டு குறித்த உள்ளூராட்சி சபைகளுக்கு, முதலாவது கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.