மக்கள் வாழ தகுதியுள்ள இந்த தீவுகளை மீனவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் அங்கு மக்கள் யாரும் தங்கவில்லை.
பருவ நிலை மாற்றம் காரணமாக சமீப காலமாக பசிபிக் கடலில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் அரிப்பும் அதிக அளவில் உருவாகிறது. இதனால் சாலமோன் தீவுகளில் உள்ள 5 தீவுகள் கடலில் மூழ்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு கடந்த 1935-ம் ஆண்டில் இருந்தே கடல் அரிப்பும், நீர்மட்டம் உயர்ந்ததால் தீவுகள் மூழ்குவதும் தொடங்கி விட்டன. அப்போது 2 தீவுகள் கடலில் மூழகின. தற்போது 5 தீவுகள் மூழ்கி விட்டன. அவை தவிர 6 தீவுகள் கடல் அரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.