கட்டார் எயார்வேயின் உரிமம் ரத்து!

கட்டார் எயார்வேஸ் விமான சேவையில், சவூதி அரேபியாவுக்கான உரிமத்தை இரத்துச் செய்த சவூதி அரேபிய சிவில் விமான சேவைக்கான பொது அதிகாரசபை, அந்நிறுவனத்தின் அலுவலகங்கள், 48 மணித்தியாலங்களுக்குள் மூடப்பட வேண்டுமென அறிவித்துள்ளது. கட்டார் எயார்வேஸ் நிறுவன ஊழியர்கள் எவருக்கும் வழங்கப்பட்ட எந்தவகையான உரிமங்களும், இதன் மூலமாக வாபஸ் பெறப்படுவதாக, அந்த அதிகாரசபை நேற்று அறிவித்தது.

ஏற்கெனவே, சவூதி அரேபியாவின் எந்த விமான நிலையங்களுக்குள்ளும், கட்டாரைச் சேர்ந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு, அதிகாரசபையால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு மறுநாளே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரசீக வளைகுடா நாடான கட்டாருடன், அதே வளைகுடாவில் அமைந்துள்ள சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், அண்மைய நாடுகளான யேமன், எகிப்து ஆகியனவும், மாலைதீவுகளும், தங்களுடைய இராஜதந்திர உறவுகளை, முறித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உரிமம்கட்டார்சவூதி அரேபியாவளைகுடாவிமானம்
Comments (0)
Add Comment