கனடாவில் திருடிய பாக் விமான பணிப்பெண் கைது!

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று லாகூரில் இருந்து கனடாவின் டோரண்டோவுக்கு சென்றது. இதில் பணியில் இருந்த விமான பணிப்பெண் ஒருவர், டோரண்டோவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்றார். அங்கு அவர் சில பொருட்களை திருடியதாக தெரிகிறது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இதனால் கையும் களவுமாக சிக்கிய அந்த பணிப்பெண்ணை அங்காடி நிர்வாகத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்ததுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் அளித்தனர். அதன்பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் கனடா புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் அவர் தவறிழைத்தது உறுதியானால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தன்யால் ஜிலானி தெரிவித்தார்.

கனடாகைதுசாவதேசம்பாக்கிஸ்தான்புலனாய்வுத்துறைவிமானப்பணிப்பெண்
Comments (0)
Add Comment