கனடாவில் மொண்ட்ரீல் தமிழ் அலுமினி நெட்வொர்க்(MTAN)

மொண்ட்ரீல் தமிழ் அலுமினி நெட்வொர்க்(MTAN): கனடாவின் மாண்ட்ரீல் பகுதியில் வளர்ந்து வரும் இளம் தொழிலாளர் குழுவை கொண்டு செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு. மாண்ட்ரீல் நகரில் உள்ள தமிழ் தொழிலாளர்களை ஒற்றுமை மற்றும் பலப்படுத்துவதே இவர்களின் முக்கிய நோக்கம். சமீபத்திய பட்டதாரிகள், சுகாதார, கணக்கியல், சட்டம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளை சார்ந்த இளம் தொழிலாளர்களை இலக்காக வைத்து மாண்ட்ரீல் தமிழ் அலுமினி நெட்வொர்க் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும், ஊக்குவித்தும் வருகிறது.

கடந்த காலங்களில் மாண்ட்ரீல் தமிழ் அலுமினி நெட்வொர்க், 5 ஏ 7 style networking cocktails, நிதி சுகாதார கருத்தரங்குகள், குழு விளையாட்டு நடவடிக்கைகள், நிதி திரட்டும் நிகழ்வுகள் மற்றும் தொழில் திட்டமிடல் கருத்தரங்குகள் போன்ற பல வெற்றிகரமான நிகழ்வுகள் நடத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் யூலை 23ம் திகதி MTAN அவர்களின் இரண்டாவது அமேசிங் ரேஸ் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வு ஒரு விளையாட்டு நிகழ்ச்சி மூலம் ஈர்க்கப்பட்டதாகும். இதில் அணிகள் துப்பு, சவால்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் வெற்றிபெற போட்டியிடுகின்றன. போட்டி மாண்ட்ரீல் நகர வட்டாரத்திலே நடைபெறவுள்ளது.

இதன் மூலம் போட்டியாளர்கள் பொது போக்குவரத்து பயன்படுத்தி தங்கள் இடங்களுக்கு செல்ல முடியும். இந்த ஆண்டு போட்டி திரைப்படம்-தீம் தொடர்பில் நடைபெறவுள்ளது. இதில் பி.ஜி.கே, 5 Shades of Brown, Team T.V., B.R.A.W.D, GetFIT, GetTOUGH, சக்தி ரேஞ்சர்ஸ் மற்றும் குங்ஃபூ போன்டாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வு தமிழ் சமூகத்தில், அணி கட்டமைப்பு மற்றும் புதிய சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது.

அமைப்புஅலுமினியம்கனடாதமிழ்தொழிலாளர்நெட்வேர்க்மொண்ட்ரீல்
Comments (0)
Add Comment